அறிவு, புத்தி மற்றும் மனம், இவை மூன்றும் ஒன்றா? என்றால் இல்லை, இவை மூன்றும் வெவ்வேறு குணாதிசயங்களையும் தன்மைகளையும் கொண்டவை. பேச்சு வழக்கில் இவை மூன்றையும் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தினாலும் இவற்றின் சிந்திக்கும் தன்மையும் ஆழமும் மாறுபடுகின்றன.
அறிவு என்பது நம் ஐம்பொறிகளைக் கொண்டு கற்றுக்கொண்ட அனுபவங்கள். இவற்றில் சில உடலிலும், சில மனதிலும் பதிவாகின்றன. சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை புத்தி என்றும், ஆன்மாவில் பதிவாகின்ற அனுபவங்களை மனம் என்றும் அழைக்கிறோம். அனுபவங்களைச் சிந்திக்கும் போதும் ஆராயும் போதும் அவை அறிவாக மாறுகின்றன.