மருத்துவம்

அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்

அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். இக்கட்டுரையை நோய் கண்டவர்களுக்காகவும், நோய்களுக்கு மருத்துவம் செய்பவர்களுக்காகவும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கும் இந்த கட்டுரையில் பதில் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பப்படுபவர்களும் இந்த கட்டுரையை வாசியுங்கள். கட்டுரையை வாசிக்கும் முன்பாக ஒன்றை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும், நிச்சயமாக ஒரு மருத்துவமோ, தீர்வோ இருக்கும். மருத்துவமோ, தீர்வோ இல்லாத தொந்தரவுகள் யாருக்கும் உருவாவதில்லை.

தலைவலி முதலாக எய்ட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும். மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை முழுமையாக அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணப்படுத்த முடியாத நோய்கள் உள்ளன என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமே அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு என்று நம்புவதுதான்.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரத் தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும், அறிந்துக் கொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறிந்து கொள்ளாமல் யாராலும் எந்த நோயையும் குணப்படுத்த இயலாது.

நோய்களைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள்

1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவு உண்டான உடன் தான் நோய் உருவானது என்று அர்த்தம் கிடையாது. சிறுவயது முதலாக சிறிது சிறிதாக சேர்ந்த கழிவுகளே பின்னாட்களில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகின்றன.

3. உடல் மற்றும் மனதில் சேரும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தைத் தடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன.

4. உடல் மற்றும் மனதில் சேரும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணமாக இருக்கின்றன.

5. உடலில் சேரும் கழிவுகள், உடல் உபாதைகளுக்கு மூல காரணமாக இருப்பதனால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த வைத்தியம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களைக் குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும். எந்த மனிதனாலும் நிச்சயமாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றிவிட்டால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று செரிமான கோளாறு மற்றொன்று மலச்சிக்கல். இவை இரண்டையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

உடலில் கழிவு சேருவதற்கான மற்ற காரணங்களை முந்தைய கட்டுரைகளில் வாசிக்கலாம்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X