நாம் குறிப்புடனும், நோக்கத்துடனும் பார்ப்பவை மட்டுமின்றி, உணர்வில்லாமல் பார்த்தவற்றையும் மனம் பதிவு செய்து கொள்கிறது. மனிதனின் மனதில் உருவாகும் பதிவுகளே அவனது வாழ்க்கையையும் வாழ்க்கையின் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, போன்றவற்றையும் முடிவு செய்கின்றன.
அதனால் எவற்றை பார்க்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளும் தேவையற்ற விசயங்களை பார்க்காதவாறு கவனமாக இருக்க வேண்டும்.