தேவலோக மங்கையரின்
அழகு போட்டியில் வென்று
மண்ணில் பெண்ணானாலோ
இந்த அழகு தேவதை
தாமரைப் பூவுக்குள் கருவாக
தோன்றி மறைந்திடும் பணியாக
பௌர்ணமி நிலவின் முகமாக
பாண்டி நாட்டு முத்தாக
எட்ட முடியாத உயரத்தில்
நின்று காட்சி கொடுத்திடும்
பெண்ணாக உருவெடுத்த
பொன் மேனி சிலை
மனிதனாகப் பிறந்ததனால்
உன்னை நெருங்க வழியின்றி
தூரம் விலகி நின்று
வேடிக்கை பார்க்கிறேன்
Leave feedback about this