ஆரோக்கியம்

அஜீரணத்தை குணப்படுத்தும் வழிமுறைகள்

person eating fish meat

அஜீரணத்தை குணப்படுத்தும் வழிமுறைகள். ஜீரணம் சீராகி உண்ணும் உணவு முறையாகச் செரிமானமாகி அனைத்து சத்துக்களும் உடலில் சார்ந்து மீதமுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற சில ஆலோசனைகள்.

1. பசியின்றி சாப்பிடாதீர்கள். சாப்பிடும் போது பசி அடங்கிவிட்டால் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

2. உணவை நன்றாக பொறுமையாக, மென்று விழுங்குங்கள்

3.பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்

4. சாப்பிடும் போது தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் அருந்தாதீர்கள்

5. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்துங்கள்

6. இரசாயனங்கள் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்

7. உணவில் காரம் மற்றும் புளிப்பைக் குறையுங்கள்

8. இரவு உணவை மாலை 6-7க்குள் முடித்துக் கொள்ளுங்கள்

9. இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள்

10. மனதை குழப்பம், கவலை போன்ற பாதிப்புகள் இல்லாமல், நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள்

11. காலையில் விரைவாக எழுந்திருங்கள்

12. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்துங்கள்.

13. இரவில் சமைத்த உணவைத் தவிர்த்து பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள்.

மேலே கூறப்பட்டவற்றைப் பின்பற்றினால், உடலில் ஜீரணம் முறையாக நடக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X