வீட்டு மருத்துவம்: ஆவி பிடித்தல்
குணமாகும் தொந்தரவுகள்: தொடர் தும்மல், சளி, தொண்டை வலி, தலைபாரம் மற்றும் சைனஸ்.
செய்முறை:
மூன்று தேக்கரண்டி ஓமத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து மூன்று முறை ஆவி பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஆவி பிடிப்பதற்கு முன்பு ஓமம் கலந்த தண்ணீரை மீண்டும் மீண்டும் சூடேற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீரைச் சூடேற்ற சிறிய செங்கல் கற்களைச் சூடாக்கி ஆவி பிடிக்கும் தண்ணீரில் போடலாம்.
ஆவி பிடிக்கும் போது உஷ்ணக் காற்று வெளியேறிவிடாமல் இருக்க தடிமனான போர்வையை அல்லது பெரிய துண்டை கொண்டு தலையோடு சேர்த்து பாதி உடலை மூடிக்கொள்ள வேண்டும்.
இதை மாலை நேரங்களில் செய்துவந்தால் விரைவாக நிவாரணம் பெறலாம். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் முழு நிவாரணம் கிடைக்கும்.
அனுபவம்: எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இவ்வாறு செய்து பயனடைந்துள்ளோம். மேலும் ஆறு மாதமாக இருந்த தொடர் தும்மல் ஒரே நாளில் குணமான அதிசயத்தையும் கண்டுள்ளோம்.
Dr. Bagyamathi M
Krishnagiri
Tamil Nadu, India