ரெய்கி

ஆற்றல்களின் வித்தியாசங்கள்

ஆற்றல்களின் வித்தியாசங்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் படர்ந்து விரிந்து நிறைந்து இருப்பது ஒரே ஆற்றல்தான். அந்த ஆற்றலையும் அதன் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்வது கடினம். இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இப்பிரிவுகள் அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது, அதன் இயல்புகளை கொண்டு அல்ல.

இந்த பிரிவுகள் ஒரு மனிதனின் வலது கரத்தையும் இடது கரத்தையும் போன்றதாகும். வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கங்கள் அவை. ஒரே நெருப்பை சிலர் வீட்டில் சமைப்பதற்கும், சிலர் வீட்டையே கொளுத்துவதற்கும் பயன்படுத்துவதைப் போன்றது. இது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ளக் கூடியது.

இந்த ஆற்றலை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தும்போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும்போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல்தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ, அனைத்துமே அவன் செயல் என்று கூறுகிறார்கள்.

தீய ஆற்றல்களை உடல் கிரகித்தால், அல்லது அவை உடலில் தேங்கினால், உடலில் நோய்களும், வலிகளும், உடல் உபாதைகளும், குறைபாடுகளும், மனதில் கவலையும், பதற்றமும், புத்தி மந்தமும், வாழ்க்கையில் துன்பங்களும், வறுமையும், தவறான உறவுகளும் நட்பும், உருவாக வாய்ப்புகள் உள்ளன.

நல்ல ஆற்றல்களைக் கிரகித்துக்கொண்டு, மேலும் அவற்றை தக்கவைத்துக் கொள்ளும் மனிதருக்கு உடலில் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், மன அமைதியும், மகிழ்ச்சியும், புத்திக் கூர்மையும், நல்ல உறவுகளும், நல்ல நட்பும், சிறப்பான திருப்திகரமான வாழ்க்கையும், வாழ்க்கையில் மேன்மையும், அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *