ரெய்கி

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள். பிரபஞ்ச ஆற்றலின் இருப்பை நம்பினாலும் நம்பாவிட்டாலும், உணர்ந்தாலும் உணராவிட்டாலும், அந்த புனிதப் பேராற்றல் எங்கும் நிறைந்திருந்து தனது கடமையைச் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறது.

ஒரு சில வழிமுறைகளின் மூலமாக மனித உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை உணர முடியும், அவற்றில் சில வழிமுறைகள்.

வழிமுறை 1

 1. இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொள்ளுங்கள்.
 2. பின், இரு உள்ளங்கைகளையும் நேர் எதிரே பார்த்தால் போல், ஒட்டாமல் வைத்துக்கொள்ளுங்கள்.
 3. இரு கைகளுக்கும் இடையில் சற்று இடைவெளி இருக்கட்டும்.
 4. சிறிது நேரத்தில் உள்ளங்கைகளுக்கு இடையில் இயங்கும் ஆற்றலை உணர முடியும்.
 5. ஆற்றலை உணர முடியாவிட்டால், இரு உள்ளங்கைகளையும் ஒட்டுவதைப் போன்ற பாவனையில், கைகளை சற்று அசைத்துக் கொடுங்கள்.

வழிமுறை 2

 1. கை தட்டுவதைப் போன்று, இரு கைகளையும் ஒருமுறை தட்டி.
 2. பின், இரு உள்ளங்கைகளையும் நேர் எதிரே பார்த்தால் போல், ஒட்டாமல் வைத்துக்கொள்ளுங்கள்.
 3. இரு கைகளுக்கும் இடையில் சற்று இடைவெளி இருக்கட்டும்.
 4. சிறிது நேரத்தில் உள்ளங்கைகளுக்கு இடையில் இயங்கும் ஆற்றலை உணரமுடியும்.
 5. ஆற்றலை உணர முடியாவிட்டால், இரு உள்ளங்கைகளையும் ஒட்டுவதைப் போன்ற பாவனையில், கைகளை சற்று அசைத்துக் கொடுங்கள்.

வழிமுறை 3

 1. இரு உள்ளங்கைகளையும் நன்றாக உரசிக்கொள்ள வேண்டும்.
 2. பின், இரு கைகளையும் தொடைகளின் மீது, உள்ளங்கைகள் மேலே பார்ப்பதைப் போன்று வைத்துக்கொள்ளுங்கள்.
 3. விரல்களை மடக்கவோ, ஒட்டவோ வேண்டாம்.
 4. அமைதியாக உள்ளங்கைகளைக் கவனியுங்கள்.
 5. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதைத் தெளிவாக உணரலாம்.

வழிமுறை 4

 1. இரு உள்ளங்கைகளையும் நன்றாக உரசிக்கொள்ள வேண்டும்.
 2. பின், வலது கையை அல்லது இரண்டு கைகளையும், ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள்.
 3. பொருளைத் தொட வேண்டாம், கைக்கும் பொருளுக்கும் சிறிது இடைவெளி இருக்கட்டும்.
 4. அமைதியாக, எந்த சிந்தனையும் இல்லாமல் உள்ளங்கைகளைக் கவனியுங்கள்.
 5. சற்று நேரத்தில் உங்கள் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணர முடியும்.
 6. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்துக் கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 5

 1. சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு அல்லது அமைதியாக மூச்சை கவனித்து விட்டு.
 2. வலது கையை அல்லது இரண்டு கைகளையும், ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள்.
 3. பொருளைத் தொட வேண்டாம், கைக்கும் பொருளுக்கும் சிறிது இடைவெளி இருக்கட்டும்.
 4. அமைதியாக, எந்த சிந்தனையும் இல்லாமல் உள்ளங்கைகளைக் கவனியுங்கள்.
 5. சற்று நேரத்தில் உங்கள் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணர முடியும்.
 6. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்துக் கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 6

 1. சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு அல்லது அமைதியாக மூச்சை கவனித்து விட்டு.
 2. உங்கள் வலது உள்ளங்கையை, சூரியன், நிலா, கடல், நெருப்பு, விலங்குகள், மனிதர்கள் போன்ற ஏதாவது ஒரு படத்தின் மீது காட்டுங்கள்.
 3. அமைதியாக, எந்த சிந்தனையும் இல்லாமல் உள்ளங்கையைக் கவனியுங்கள்.
 4. சற்று நேரத்தில் உங்கள் உள்ளங்கையில் அந்த படத்தின் ஆற்றலை உணர முடியும்.
 5. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்துக் கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமோ கொண்டு செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X