உடலின் ஆற்றலை தக்க வைத்துக்கொள்ள. மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் பின்பற்றவேண்டிய சில எளிய வழிமுறைகள்.
உணவுப் பழக்கங்கள்
உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளையும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளையும் உட்கொள்ளும் போது உடலின் ஆற்றலை அதிகரிக்க முடியும். உடலுக்கு ஏற்ற உணவு எனும் போது அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடலாம். ஒரு தாய்க்கும் சேய்க்கும் கூட உணவின் தேவைகள் மாறுபடலாம். பழங்களும் காய்கறிகளும் மட்டுமே அனைத்து மனிதர்களுக்கும் பயன்தரக்கூடிய உணவுகளாகும். அவற்றில் மட்டுமே மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
வழிபாடுகள் மற்றும் பயிற்சிகள்
தொழுகை, வழிபாடு, பிரார்த்தனை, தியானம், யோக, தைச்சி, மூச்சுப் பயிற்சி, மற்றும் மற்ற ஆன்மீகப் பயிற்சிகளின் மூலமாக மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம், மேலும் தக்க வைத்துக் கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகள் உடலின் ஆற்றல் சீர்கெடாமல் தடுப்பதோடு, சீராக செயல்படவும் உதவுகிறன.
இயற்கையோடு இணைதல்
காடு, மலை, கடல், ஆறு, அருவி, குளம், புல்வெளி, போன்ற இடங்களில் கால்களில் செருப்பின்றி நடக்கும் போதும், அமைதியாக அமர்ந்திருக்கும் போதும், நீராடும் போதும் பிரபஞ்ச ஆற்றல் உடலுக்குள் கிரகிக்கப்படுகிறது. உடலின் ஆற்றல் சீர் கேட்டிருந்தால் அவற்றைச் சீர்செய்யவும் உதவுகிறது, மேலும் உடலின் ஆற்றலும் இயற்கையுடனான தொடர்பும் மேம்பாடு அடைகிறது.
பொருளாதார நிலை மேம்பட
ரெய்கியை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் தங்களின் பொருளாதார நிலை மேம்பட சிறப்பாக எந்த பயிற்சியும் செய்யத் தேவையில்லை. அவர்கள் கேட்கும் பொருளும் அவர்களுக்குத் தேவையான செல்வமும், தக்க சமயத்தில் அவர்களை வந்தடையும். ஒரு மனிதனின், மனம், ஆற்றல், சக்ரா, ஆரா அனைத்தும் முறையாக இயங்கும் போது அவரின் பொருளாதார நிலைமை மேம்படும். அவரின் உழைப்பும் முயற்சியும் இனையும்போது நிச்சயம் வெற்றியைத் தரும்.
மன அமைதி
எதிரிகள், துரோகிகள், மற்றும் உங்களுக்குக் கெடுதல் செய்த அனைவரையும் மன்னித்து விட்டு, மனதை, கோபம், கர்வம், பயம், பொறாமை, போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருந்தாலே; மன நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் தானாக தேடிவரும்.
ஒரு நபருக்கு மனம் எவ்வளவு அமைதியாகவும் தூய்மையாகவும் இருக்கிறதோ, பிற மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்குமான அவரின் தொடர்பு அந்த அவ்வளவுக்கு அதிகரிக்கும்.
மனதின் சக்திதான் வாழ்க்கையின் ஆதாரம்
அரிஸ்டாட்டில்
குடும்ப மற்றும் சமுதாய உறவுகள்
ஒரு மனிதனின், மனம், ஆற்றல், சக்ரா, ஆரா, அனைத்தும் முறையாக செயல்படும் போது அந்த மனிதருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறும்.
தேவைகள் நிறைவேற
ஒரு மனிதனின், மனம், ஆற்றல், சக்ரா, ஆரா, அனைத்தும் சிறப்பாக இயங்கும் போது அவரின் தேவைகள், ஆசைகள், அனைத்தும் நிறைவேறும். அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அறத்துக்குக் கட்டுப்பட்டு, நன்மையானதாக இருந்தால், அது அவருக்கு நிச்சயமாக வெற்றியைக் கொடுக்கும்.
Leave feedback about this