ரெய்கி

ஆற்றலைக் கட்டுப்படுத்துதல்

ஆற்றலைக் கட்டுப்படுத்துதல் (Grounding). ரெய்கி ஹீலிங் மற்றும் கிளின்சிங் செய்து முடித்த பிறகு கிரவுண்டிங் செய்வது அவசியமாகும். கிரவுண்டிங் எனப்படுவது சிகிச்சை அளித்தவரின் உடலுக்குள் இறங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச ஆற்றலை துண்டிப்பது அல்லது கட்டுப்படுத்துவதாகும். மேலும் ரெய்கி சிகிச்சை பெற்ற நபரிடமிருந்து சிகிச்சை வழங்கியவரின் உடலுக்குள் எந்த தேவையற்ற ஆற்றலும் அலையும் அண்டாமல் இருப்பதற்கும், இருவருக்கும் இடையில் ஆற்றல் இணைப்பு இல்லாமல் துண்டிப்பதற்குமான வழிமுறையாகும்.

ஒரு நோயாளிக்கு அல்லது வாழ்வியல் பிரச்சனைகள் உள்ளவருக்கு ரெய்கி சிகிச்சை வழங்கும் போது, அவரின் தொந்தரவுகளுக்குக் காரணமான தீய ஆற்றல் அழிக்கப்பட வேண்டும். ஒரு சில வேளைகளில் அந்த தீய ஆற்றல்கள் சிகிச்சை வழங்கிய நபரின் உடலுக்குள் புகுவதற்கு முயற்சி செய்யலாம், அல்லது சிகிச்சை வழங்கப்படும் இடத்தில் இருக்கும் மற்ற நபர்களின் மீது பரவ முயற்சி செய்யலாம்.

ஒரு சில தீய ஆற்றல்கள் தான் வெளியேற்றப்பட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கலாம். அந்த தீய ஆற்றல் சிகிச்சை வழங்கியவரையோ, அவரை சார்ந்த மனிதரையோ அண்டி அவர்களுக்கு சில பல தொந்தரவுகளை உருவாக்கலாம். இவ்வாறான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்குத் தான் கிரவுண்டிங் என்ற வழிமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரெய்கி சிகிச்சை வழங்குவர் சிகிச்சை பெற்றவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களைக் கண்டறிய வேண்டும். ரெய்கி பயிற்சிகளில் வழங்கப்படும் வழிமுறைகளைக் கொண்டு தீய ஆற்றல்களை, புதைத்து, எரித்து, கரைத்து, அழித்துவிட வேண்டும்.

ஒரு நபருக்கு ரெய்கி சிகிச்சை வழங்கப்படும் போது, ரெய்கி ஆற்றல் தடைப்படாமல், சிகிச்சை வாங்குபவரின் உடலில் தொடர்ந்து இறங்கிக் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக சிகிச்சைக்குப் பிறகு ரெய்கி சிகிச்சை வழங்கியவரின் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும், உச்சமாகவும் இருக்கலாம். அதன் காரணமாக சிலருக்கு இரவில் உறக்கமின்மை, தலைவலி, மலச்சிக்கல், உடல் உஷ்ணம் போன்றவை உண்டாகலாம்.

அதனால் ஒவ்வொரு முறை ரெய்கி சிகிச்சை வழங்கிய பிறகும் வகுப்பில் கற்றுத்தரும் வழிமுறைகளைக் கொண்டு பிரபஞ்சத் தொடர்பையும், ஆற்றலையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X