ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய வேண்டும் என்று விரும்பினாலும்; பணமோ, செல்வமோ, பொருளோ, புகழோ, ஞானமோ, உறவோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய உதவக்கூடிய சில வழிமுறைகள்.
1. முதலில் நீங்கள் விரும்பும் விசயம், எதற்காக உங்களுக்கு வேண்டும் என்பதைச் சிந்தித்து தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன பயன், அதனால் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன பயன்? என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.
3. நீங்கள் விரும்பியவற்றை அடைவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை ஆராயவும் அறிந்துகொள்ளவும் வேண்டும்.
4. அதன் தொடர்பாக ஆழமாகவும் விரிவாகவும் சிந்திக்க வேண்டும்.
5. அதன் தொடர்புடைய புத்தகங்கள் மற்றும் இணையப் பக்கங்களை வாசிக்க வேண்டும், வீடியோக்களை பார்க்க வேண்டும், ஆடியோக்களை கேட்க வேண்டும்.
6. அதற்குத் தொடர்புடைய மனிதர்களைச் சந்திக்க வேண்டும், அவர்களுடன் உறவையும் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி சந்தித்து கலந்துரையாட வேண்டும்,
7. மனதளவில் கற்பனையில், அது உங்களுக்கு கிடைத்து விட்டது போலவும், அதை நீங்கள் அனுபவிப்பதைப் போலவும், பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவும், அடிக்கடி கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
8. உங்கள் தேவை நிறைவேறி விட்டதை போலவும், அதை நீங்கள் அடைந்துவிட்டதை போலவும், அதை தற்போது பயன்படுத்துவதைப் போலவும், பாவித்து அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
9. அனைவரும் கூறுவது போன்று நான் வெறும் கற்பனை செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. அது உண்மையில் அடைந்த பிறகு ஏற்படும் உணர்வும், அதை அடைந்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் இப்போதே உருவாகிவிட வேண்டும்.
10. இறுதியாக ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒருவர் ஆசைப்படுவதால் மட்டும் ஒரு விசயம் அவருக்குக் கிடைத்துவிடுவதில்லை. அதற்குரிய காலமும், நேரமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே ஒருவருடைய ஆசை நிறைவேறும்.
Leave feedback about this