நோய் நொடிகள் எதுவுமின்றி எப்போதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில ஆரோக்கிய டிப்ஸ்.​

1. பசித்தால் உள்ளதைச் சாப்பிடுங்கள், பசியில்லை என்றால் அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடாதீர்கள்.

 

2. தாகம் உண்டானால் அளவோடு தண்ணீர் அருந்துங்கள். தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தாதீர்கள்.

3. எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுங்கள்.

 

4. இரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

5. இரசாயனம் கலந்த பொருட்கள், உணவுகள், மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

6. எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கி விடுங்கள்.

7. மாதம் ஒரு முறையாவது குளத்தில், ஆற்றில், கடலில் அல்லது மழையில் குளியுங்கள்.

8. சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடலின் கழிவு நீக்கங்களைத் தடுக்காதீர்கள்.

9. மலச்சிக்கல் இல்லாமல் உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

10. இரவில் அதிகமாக உண்பதும், தாமதமாக உறங்குவதும் மலச்சிக்கல் உருவாக முக்கிய காரணமாகிறது. 

11. எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும் மனச் சஞ்சலம் படாதீர்கள். மனதின் சம நிலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் உடலை நம்புங்கள், உடலின் பேச்சைக் கேட்டு செயல்படுங்கள். உங்கள் உடலைத் தவிர வேறு யாருக்கும் உங்களை முழுமையாகத் தெரியாது.

X