எனது பார்வையில் ஆன்மீக வாழ்க்கை என்பது மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விசயமல்ல, மாறாக கொடுக்கப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நிறைவாக வாழ்வது. யாரோ ஒரு கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற அச்சத்தில் வாழாமல், மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் செல்லப் போகிறேன் என்று கற்பனையில் வாழாமல். கொடுக்கப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நிறைவாக வாழ்வதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வு என்பது எனது தனிப்பட்ட கருத்து.
மனித உடலையும், இந்த உலகையும், இந்த வாழ்க்கையையும், புரிந்து கொண்டு வாழ்வதுதான் முழுமை பெற்ற வாழ்க்கையாக இருக்கும். வாழ்க்கையை எவ்வாறு நிறைவாக வாழ்வது என்பதைப் புரிந்து கொள்வதும் ஆராய்வதும் தான் ஆன்மீகப் பயிற்சியாக இருக்கும்.
Leave feedback about this