ஆண்மை வீரியத்திற்கு மருந்துகள் பயன் தராது. ஆண்மை வீரியக் குறைவு ஏற்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் சிலர் ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்; ஆண்மை வீரியத்திற்கு பயன்படுத்தும் பெரும்பாலான மாத்திரைகள் மிகக் கேடான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை, மற்றும் ஆண்மையை இன்னும் பலவீனப்படுத்தக் கூடியவை. தற்காலிகமாக உங்களுக்கு பலன் தெரியலாம் ஆனால் காலப்போக்கில் பல பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியவை.
உண்மை காரணத்தைக் கண்டுபிடித்து அதை சரிசெய்தால் ஒழிய எந்தப் பலவீனத்தையும், உடல் உபாதையையும் குணப்படுத்த எவராலும் முடியாது. அதனால் அண்மைய வீரியத்தை சரி செய்ய மருந்து மாத்திரைகளையும், குறுக்கு வலிகளையும் நாடாமல், உடல் மற்றும் மனதைச் சரி செய்ய வேண்டும். உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் சரி செய்தால் ஆண்மை வீரியம் தானாகச் சீராகும்.