ஆண்மை கோளாறும் தீர்வுகளும். அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் படித்தேன் என்று, நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் உண்மை என்னவென்றால். ஆண்மை கோளாறு என்ற ஒன்றே கிடையாது. ஆண்மை இல்லாத ஆண் என்றும் யாருமே கிடையாது, நம்புங்கள்.
ஆனால் என்னால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை, எனக்கு விரைப்பு தன்மை ஏற்படவில்லை, என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது, என நீங்கள் எதையாவது சொல்லலாம். பல ஆண்கள் மேலே சொல்லப்பட்ட தொந்தரவுகளால் அவதிப்படுவது உண்மைதான். ஆனால் இது ஒரு தற்காலிக தொந்தரவே ஒழிய, இது நீடிக்காது. உங்களின் ஆண்மை மீண்டுவிடும், நீங்கள் உடலுறவில் உங்கள் மனைவியுடன் இன்பமாகக் கண்டிப்பாக இருப்பீர்கள், நம்புங்கள்.
ஆண்மை கோளாறுகள் உருவாகக் காரணங்கள்
உங்களுக்கு ஆண்மை கோளாறுகள் எப்போது உருவானது என்று கேட்டால் பலர், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான நோய்கள் உருவான பின்பு என்று சொல்வார்கள் அல்லது. புது வேலைக்கு சென்ற பின்பு, கடன் தொல்லைகள் உருவான பிறகு, குடும்ப தகராறுகள், மனைவியுடன் மனக் கசப்பு, எனப் பல காரணங்கள் சொல்வார்கள். இப்போது நாம் ஆண்மை கோளாறுகள் உருவாக உண்மையான காரணங்களைப் பார்ப்போம்.
1. மனதினால் உருவாகும் ஆண்மை பாதிப்பு
மேலே கூறப்பட்ட 13 வகையான கோளாறுகளுக்கும் சொல்லப்படாத மற்ற கோளாறுகளுக்கும், முதன்மைக் காரணமாக இருப்பது மனம். மனதில் ஏற்படும் பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வம், தவறான காமம் போன்றவை ஆண்கள் உடலுறவுக் கொள்ள இயலாமல் தடையாக உள்ளது.
ஆண்மை கோளாறு மட்டும் அல்ல, மனிதனுக்கு ஏற்படும் அனைத்து தொந்தரவுகளும் மனதிலிருந்துதான் தொடங்குகின்றன. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் கெட்ட எண்ணங்கள் ஆரோக்கிய சீர்கேடுகளையும் உருவாக்குகின்றன “மனம்தான் மனிதன்”.
உங்கள் மனதை முதலில் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும், நடுநிலையாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நோய்களும் தானாகக் குணமாகிவிடும். ஆண்மை வீரியம் நிச்சயமாகத் திரும்பிவிடும் இது உண்மை.
2. நோய்களால் உண்டாகும் ஆண்மை பாதிப்பு.
ஒரு ஆணுக்கு ஏதாவது நோய் உருவானாலோ அல்லது உடல் உறுப்புகள் நோய்வாய்ப் பட்டாலோ ஆண்மை குறைய வாய்ப்புண்டு. சில ஆண்கள் தங்களுக்கு நோய்கள் உள்ளதை உணராமல் கூட இருக்கலாம். இந்தக் காரணத்தினால் உருவான ஆண்மைக் குறைபாடு, நோய்கள் குணமாகும் போது படிப்படியாகச் சீராகிவிடும்.
3.மருந்துகளால் உருவாகும் ஆண்மை பாதிப்பு.
பலருக்கு மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆண்மை குறைபாடுகள் உருவாகின்றன. ஆனால் அவர்கள் அந்த ஆண்மை குறைபாடுகள் நோய்களால் உருவானவை எனத் தவறாக எண்ணுகிறார்கள்.
நோய்வாய்ப் பட்டவர்களுக்கு, உதாரணத்துக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, இரைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்களுக்கு. இயற்கையாகவே உடலின் இயக்கச் சக்தியும், ஆற்றலும் குறைவாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது, உடலில் இருக்கும் குறைவான சக்திகள் அந்த மருந்து மாத்திரைகளில் உள்ள உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களைப் பிரித்து உடலில் இருந்து வெளியேற்ற அதிகமாகச் செலவு செய்யப்படுகின்றன. அதனால் அவர்களுக்கு உடலுறவு கொள்ள போதிய சக்தி இருப்பதில்லை.
இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் வரையில் இந்த நிலை தொடரும். இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை நிறுத்தினால் குணமாகும்.
4. உடலின் சக்தி குறைவினால் உருவாகும் ஆண்மை பாதிப்புகள்.
நாம் உண்ணும் உணவு முறையாகச் சீரணித்து சக்தியாக மாறாமல். உடலில் சக்திக் குறைபாடுகள் உருவாகி அதனால் உண்டாகும் ஆண்மைக் கோளாறுகள். சில இறைச்சி வகைகள், சில கடலை வகைகள், சில காய்கறிகள், சில பழங்கள், சில மூலிகைகள் ஆண்மையைக் கூட்டும் என்று சிலர் நம்புகிறார்கள். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதை உட்கொண்டாலும் அதைச் சக்தியாக மாற்றி உடலுக்கு வழங்குவது உடலின் செரிமான மண்டலம் தான்.
சீரணம் முறையாக நடைபெறாவிட்டால், நீங்கள் அமிர்தத்தைச் சாப்பிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. எல்லாம் வீண், அவை கழிவாக உடலைவிட்டு வெளியேறிவிடும்.
இன்று பெரும்பாலான ஆண்கள் செரிமானம் சரியாக நடக்காததால் சக்தி குறைந்து ஆண்மையை இழக்கிறார்கள். உங்கள் செரிமான மண்டலம் முறையாகச் செயல்பட்டால், நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்குத் தேவையான சக்திகளை உடலால் அந்த உணவிலிருந்து உற்பத்தி செய்துகொள்ள முடியும் நம்புங்கள். மூன்று வேளையும் வெறும் கஞ்சியைக் குடிப்பவருக்கும் உடலில் அனைத்து சத்துக்களும் இருக்கும். அவரும் ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றார்.
5. ஆண்மை வீரிய மருந்துகளால் உருவாகும் ஆண்மை பாதிப்புகள்.
சில ஆண்கள், ஆண்மையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், ஆண்மை வீரியத்தைக் கூட்டக்கூடிய இரசாயனம் கலந்த மருந்துகளையோ, நாட்டு மருந்துகளையோ நாடி ஓடுகிறார்கள். இது ஒரு கேடான செயலாகும், உடலில் ஏன் ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து அதைச் சரி செய்யாமல், மருந்துகளை நாடுவது, ஆண்மையை இன்னும் குறைத்து அதை ஒரு நிரந்தர குறையாக மாற்றிவிடும்.
6. மனத் திருப்தி இன்மையினால் உருவாகும் ஆண்மை பாதிப்புகள்.
சிலருக்கு மனைவியைப் பிடிக்காமல், அவரின் அழகு போதவில்லை, நிறம் போதவில்லை, உயரம் போதவில்லை, உடல்வாகு பிடிக்கவில்லை, செயல் பிடிக்கவில்லை, குணம் பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி மனைவியை ஒதுக்குவதாக நினைத்து தன் ஆண்மையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த எண்ணங்கள் மாறும்போது, ஆண்மை தானே திரும்பிவிடும்.
7. மனைவியினால் ஏற்படும் ஆண்மை பாதிப்புகள்.
இது ஒரு மனோவியல் தொடர்பான கோளாறு. மனைவி கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்யும் போது. கணவனின் குறைகளை, இயலாமையைச் சுட்டிக்காட்டும் போது ஆண்மைக் கோளாறுகள் உருவாக வாய்ப்புண்டு. மனைவி மீது நாட்டமின்மையும் வெறுப்பும் ஏற்படவும் வாய்ப்புகளுண்டு.
மனைவியை நெருங்கும் போது மனைவியின் மீது கெட்ட வாடை ஏற்பட்டால், கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. உடலுறவு கொள்ளும் போது மனைவி நாட்டம் காட்டாமல், மரக்கட்டைப் போல் கிடந்தாலும் கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. இந்தக் காரணங்களால் ஏற்படும் ஆண்மைக் குறைவுகள் மனைவி தன்னை மாற்றிக்கொள்ளும் போது சரியாகிவிடும்.
கணவனின் உடலுறவு கொள்ளும் திறனை, குறைத்துப் பேசினால். திருப்தி இன்மையை வெளிப்படையாகக் கூறினால், கணவனுக்கு நாட்டம் குறைய வாய்ப்புண்டு. அதனால் மனைவியானவள் உடலுறவில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கணவனின் ஆற்றலைப் புகழ்ந்து பேச வேண்டும், திருப்தி ஏற்பட்டதாகப் பாசாங்கு செய்ய வேண்டும், மனைவி கொடுக்கும் இந்த நம்பிக்கை கணவனின் ஆண்மையை மீட்டுத்தரும்.
8. கெட்ட பழக்கங்களால் உருவாகும் ஆண்மை பாதிப்புகள்.
குடிப்பழக்கம், புகையிலை பழக்கம், போதைப் பொருள் உபயோகித்தல், விலைமாதர்களை நாடுதல், பல பெண்களுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்ற தீயப் பழக்கங்கள் ஆண்மை கோளாறுகளை உண்டாக்கும். இந்தக் காரணங்களால் உருவாகும் ஆண்மை கோளாறுகள், இந்தத் தீய பழக்கங்களை விட்டவுடன் மெல்லச் சரியாகும், ஆண்மை திரும்பும்.
9. தீய பழக்கங்களால் உருவாகும் ஆண்மை பாதிப்புகள்.
நீலப் படம் பார்ப்பது, காம கதைகளை வாசிப்பது, காமம் தொடர்பான ஆடியோக்களை கேட்பது, காமம் தொடர்பான கற்பனைகளில் மூழ்குவது, சிந்திப்பது, காமம் தொடர்பாகத் தேவையில்லாமல் பேசுவது போன்றவை மிக கேடான ஆண்மை கோளாற்றை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆண்மை கோளாறுகள் மட்டும் இல்லாமல், பல உடல் உறுப்புகள் தொடர்பான தொந்தரவுகளையும் உருவாக வாய்ப்புண்டு.
இது போன்ற வீணான விஷயங்களைப் பார்த்துவிட்டு, சுய இன்பத்தில் ஈடுபடுவது, மிகக் கேடான விளைவுகளை ஏற்படுத்தும். ஆண்மை கோளாறுகள் மட்டுமல்லாமல் சில உள் உறுப்புகளையும் சிதைத்துவிடும்.
10. சிறுவயதில் தவறாக வளர்ப்பு.
சிறு வயதில் பெற்றோர்களால், கண்ட நேரத்தில் பசியின்றி, தேவையின்றி உணவு கொடுக்கப்பட்டு, தேவையில்லாமல் தண்ணீர் கொடுக்கப்பட்டு, மன அழுத்தம் வரும் அளவுக்குப் படிப்பு படிப்பு என வளர்க்கப் பட்ட பிள்ளைகள், பிற்காலங்களில் ஆண்மை கோளாறுகள் மற்றும் உடல் உறவில் நாட்டமின்மையால் அவதியுற வாய்ப்புண்டு.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் ஜாக்கிரதை, அவர்களின் உடல் மற்றும் மன நலன் உங்கள் கையில் தான் உள்ளது.
ஆண்மை கோளாறுகளுக்குத் தீர்வு
ஆண்மை கோளாறு பிரச்சனைகள் குணமாக. முதலில் உங்களுக்கு எந்த வகையான பிரச்சனை உள்ளது, அது ஏன் உருவானது என்று புரிந்து கொள்ள வேண்டும். பின்பு மேலே கூறப்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் உடலைப் பாதிப்புகளிலிருந்து மாற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.
மேலே குறிப்பிடாத வகையான தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால் கட்டுரைக்குக் கீழே பதிவு செய்யவும்.