ஆண்கள் எதிர்நோக்கும் ஆண்மை கோளாறுகள். இன்றைய கால கட்டத்தில் பல ஆண்கள், ஆண்மைக் குறைவினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஆண்மைக் குறைவு என்றவுடன் உடல் உறவு கொள்ள இயலாமை என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. ஆண்மை என்றால் ஒரு ஆண் மகனின் ஒட்டு மொத்த உடலின் திறனையும் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். ஆண்மையை வெறும் உடலுறவு தொடர்பான விசயமாக எண்ணக்கூடாது. முதலில் ஆண்களின் ஆரோக்கியம் என்றால் என்னவென்று பார்ப்போம்.
ஆரோக்கியமான ஆணின் அடையாளங்கள்
ஆரோக்கியமான ஆண் உடலளவிலும் மனதளவிலும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அவனுக்கு தன் தினசரி வேலைகளை செய்வதில் எந்த சிக்கலும் உண்டாகக்கூடாது. தன்னுடைய அலுவல் வேலைகளையும், தனது சொந்த வேலைகளையும் செய்யும் போது; எந்த தொந்தரவையும், வலியையும், சிக்கலையும் அனுபவம் செய்யக்கூடாது. யார் தன் சொந்த வேலைகளைச் செய்யவே கஷ்டப்படுகிறாரோ, அவர் ஆரோக்கியம் குறைந்தவர்.
ஒரு கூலித் தொழிலாளி பத்து மூட்டைகளைத் தூக்கிவிட்டு, இடுப்பு வலிக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு விவசாயிக்கு உழைப்புக்குப் பின் உடல் வலிகள் உண்டானால் பரவாயில்லை. ஒரு வாகன ஓட்டுநர் பல மணி நேரம் வாகனம் ஓட்டுவதால் அசதி, வலி உண்டானால் பரவாயில்லை. ஆனால் வெறும் ஏசி அறையில் வேலை செய்பவர், சும்மா இருப்பவர், சுலபமான வேலைகளைச் செய்பவர், எந்த உடல் உழைப்பும் செய்யாத சூழ்நிலையில், உடல் உபாதைகளுக்கு ஆளானால், தன் அன்றாட கடமைகள் செய்யவே கஷ்டப்படுகிறார் என்றால், அவர் உடல் ஆரோக்கியம் குறைந்தவர் என்று பொருளாகும்.
பெரும்பாலான ஆண்கள் எதிர்நோக்கும் ஆண்மை கோளாறுகள்.
1. உடலுறவு கொள்ள இயலாமை
2. விறைப்பு தன்மை குறைவு
3. விந்து முந்துதல்
4. உடலுறவில் நாட்டம் இன்மை
5. உடலுறவு கொள்ளும் போது வலிகள்
6. உடலுறவு கொண்டபின், இடுப்பு, கால், முதுகு பகுதிகளில் வலிகள்
7. உடலுறவு கொள்ளும் போது மூச்சிரைப்பு
8. பாதியில் உறுப்பு சுருங்குதல்
9. உடலுறவு கொள்ளப் பயம்
10. ஆண்குறி சிறியதாக இருத்தல்
11. குழந்தையின்மை
12. உடலுறவில் திருப்தி இன்மை
13.மனைவியின் மீது நாட்டமின்மை.
இன்னும் பல….