ஆன்ம விடுதலை
வைத்த நிதிபெண்டிர்
திருவாசகம்
மக்கள்குலம் கல்விஎன்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
நான், எனது உழைப்பு, நான் சேர்த்த செல்வம், எனது வாழ்க்கைத் துணை, என்னுடைய பிள்ளைகள், என்னுடைய உறவினர்கள், நான் கற்ற கல்வி, நான் பெற்ற பட்டம் என்று மனநலம் பாதிக்கப்பட்டவரை போன்று சுற்றிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிறைந்த இந்தப் பூமியில், நான் வைத்த பற்றுகளால் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
நான் செய்து கொண்டிருந்த தவறுகளை உணர்த்தி, எனது சிந்தனையைத் தெளியவைத்து. எனது ஆன்ம விடுதலைக்குத் தேவையான பாதையைக் காட்டி அனைத்தையும்உணர்த்திய என் குரு தேவருக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் சமர்ப்பித்துவிடு தும்பி.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு, யாண்டும் இடும்பை இல
குறள் எண்:4
விருப்பு வெறுப்புகள் அற்ற இறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைந்தவர்கள் மீண்டும் இந்தப் பூமியில் பிறக்கப் போவதில்லை, அதனால் அவர்கள் என்றென்றும் துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள்.
திருச்சிற்றம்பலம்