1. சினிமா, வீடியோ மற்றும் கதைகளில் வரும் பெண்களோடு உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் நடிப்பு, கற்பனை, உங்கள் மனைவியோ உண்மை.
2. ஆபாசக் காணொளிகளில் வரும் பெண்களுடன் உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவர்களைப் போல் இருக்க வேண்டும், நடிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசை படாதீர்கள். அது பெரிய தவறு.
3. ஆபாசக் காணொளிகளில் வருவதைப் போல் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அவை வெறும் நடிப்பு மட்டுமே. அதில் எதுவும் உண்மை இல்லை.
4. ஆபாசக் காணொளிகளில் வரும் ஆண்களுடன் உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் கேமரா லென்ஸ் விளையாட்டுக்கள். ஒவ்வொரு ஆணுக்கும் ஆணுறுப்பின் அளவு மாறுபடும் ஆனால் அனுபவிக்கும் சுகத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. அதனால் கவலை வேண்டாம்.
5. ஆணுறுப்பு ஒல்லியான ஆணுக்கு பெரியதாகவும் பருமனான ஆண்களுக்குச் சிறியதாகவும் இருப்பது போல் தோன்றும், அதற்குக் காரணம். அவர்களில் தொடை பெரிதாக இருப்பதால் அதன் இடையில் இருக்கும் ஆணுறுப்பு, தொடையுடன் ஒப்பிடும்போது சிறியதாக இருப்பது போல் தோன்றும்.
6. தினமும் உடலுறவு கொள்ள வேண்டும், அல்லது அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.
7. உண்மையில் ஆசையும், தேவையும் உண்டானால் மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள்.
8. மனைவியை வற்புறுத்தாதீர்கள். வேண்டா வெறுப்பாக உடலுறவு கொள்வதில் இன்பம் இருக்காது.
9. படம், வீடியோ, கதைகள் என எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல். தானாக தோன்றும் காம உணர்வுக்கே உடலும் மனமும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
10. உடலுறவு என்பது, வெறும் விந்தை வெளியேற்றும் வேலை அல்ல, எனது சுகம், எனது திருப்தி என்று சுயநலமாக இருக்காதீர்கள். மனைவியின் சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
11. ஆண்களுக்கு விந்து வெளியானால் போதும் திருப்தி உணர்வு வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவள் மனம் திருப்தி அடைந்தால் மட்டுமே அவளுக்கு நிறைவு அடையும்.
12. மனைவியை ரசிப்பதையும், ருசிப்பதையுமே அவள் அதிகம் விரும்புவாள். அதுதான் அவளுக்கு முழுத் திருப்தியைத் தரும்.
13. உங்கள் மனைவியைத் திருப்தி படுத்துவதும், அவளை மகிழ்ச்சிப் படுத்துவதுமே உண்மையான உடலுறவு என்று புரிந்துகொள்ளுங்கள்.
14. உங்களுக்குப் பிடித்த ஒன்று உங்கள் மனைவிக்குப் பிடிக்காமல் இருக்கலாம், சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
15. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுது உங்கள் மனைவியின் மன நிலையைக் கவனியுங்கள். அவள் திருப்தி அடைந்தாளா? அவளுக்குப் பிடித்திருக்கிறதா? என்று அறிகுறிகளைக் கவனித்துச் செயல்படுங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.
16. நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தாள், அவள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பாள். இன்பத்தைக் கொடுத்தது திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.
17. உண்மையான காம உணர்வு வரும் வரையில் காத்திருந்து, உறவு கொண்டால் இன்பம் பல மடங்கு கூடுதலாக இருக்கும்.
18. மனைவியைப் பார்த்ததும் தானாகத் தோன்றும் காம உணர்வில்தான் மனம் திருப்தி அடையும்.
19. ஒரு ஆணின் முழுமையான ஆண்மையின் வளர்ச்சி 35 வயதுக்கு மேல் தான் முழுமை அடையும் அதனால். 35 வயதைத் தாண்டியதும், கிழவனைப் போல் உணராதீர்கள். 30 வயதுக்கு மேல்தான் காளை பருவம் தொடங்குகிறது, பூந்து விளையாடுங்கள்.
20. ஆரோக்கியமான ஆனால் 80 வயதிலும் உடலுறவு கொள்ள முடியும்.