ஆளில்லாத உணவகத்துக்கும்
ஆளில்லாத திரைப்படத்துக்கும்
ஆளில்லாத கடற்கரைக்கும்
அழைத்துச் செல்வதும்
மனித நடமாட்டம் இல்லாத
அமைதியான தெருக்களில்
உன்னுடன் கைகோர்த்து
நடந்து செல்வதும்
நீயும் நானும் மட்டும்
வாழும், நம் உலகம்
எப்படி இருக்கும் என்பதை
உணர்ந்து கொள்ளத்தான்..!