தியானத்தின் போது செய்யக்கூடாத 15 விசயங்கள்
1. தியானம் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது, உள்ளாடைகள் அணியாமல் இருப்பது சிறப்பு.
2. தியானத்தின் போது கை கடிகாரம், சங்கிலி, மோதிரம், போன்ற ஆபரணங்கள் அணியக்கூடாது.
3. தாலி, ருத்ராட்சம், போன்ற சடங்குகளுக்கு உரிய ஆபரணங்களையும்; ராசி கற்களைப் போன்று எப்போதும் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கழட்டத் தேவையில்லை.
4. தொடக்க நிலையில் விரிப்பு இல்லாமல் வெறும் தரையில் அமரக் கூடாது.
5. உடல் உபாதைகள் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள், சாயவோ படுக்கவோ கூடாது.
6. தியானத்தைத் தொடங்குவதற்கு 2 மணி நேர இடைவெளியில் சாப்பிடக் கூடாது.
7. வற்புறுத்தி அல்லது உடலை வருத்தி தியானம் செய்யக் கூடாது.
8. பயம், கவலை, துக்கம், குழப்பம் போன்ற உணர்வுகள் இருந்தால் தியானம் செய்யக் கூடாது.
9. அமைதியாக அமர்ந்திருந்து, மூச்சை கவனித்து, மனம் தெளிவடைந்த பிறகு தியானத்தைத் தொடங்கலாம்.
10. மூச்சுப் பயிற்சி பழக்கத்தில் வர வேண்டும், வற்புறுத்தி மூச்சு விடக் கூடாது.
11. எந்த சிந்தனையும் கற்பனையும் செய்யக்கூடாது. ஒரு வேலை கற்பனைகள் தோன்றினால் அவற்றைக் கட்டுப்படுத்த கூடாது.
12. அதிக சத்தம் அல்லது இடைஞ்சல்கள் உள்ள இடத்தில் தியானம் செய்யக் கூடாது.
13. அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய இடங்களில் தியானம் செய்யக் கூடாது.
14. பழக்கம் இல்லாத அந்நிய நபர்களின் வீடுகளில் தியானம் செய்யக் கூடாது.
15. தியானத்தின் போது எதையும் அடைவதற்கோ காண்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும்.