சூரியன் தன் சேவைக்கு எந்நாளும் பிரதிபலனை
எதிர்பார்க்க மாட்டான் இருந்தும் அவனுக்கு நன்றி
எங்கள் அரிசிக்கு அவனும் அவன் வைக்கோலுக்கு
நாங்களும் சேர்ந்து வயலில் உழைக்கிறோம்
எந்நாளும் உழைப்புக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல்
சேர்ந்து பாடுபடும் தோழன் காளை – அவனுக்கும் நன்றி
விளைந்து நிற்கும் நிலம், மழை தூவும் வானம்
தாகத்தைத் தணிக்கும் நீர், பால் கொடுக்கும் பசு
வீட்டைக் காக்கும் நாய், உடன் வாழும் மனிதர்கள்
குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், உலகத்தார்
அனைவருக்கும் அனைத்துக்கும்
நன்றி கூறும் நாள், பொங்கல் திருநாள்
நாங்கள் தமிழர்கள் எங்களுக்குத் தெரியும்
நன்றி மறப்பது நன்றன்று