பிற மனிதர்களின் தவறுகளால் உண்டாகும் துன்பங்கள். ஒரு விமான விபத்து நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 200 பயணிகள் உயிரிழக்கிறார்கள். அந்த 200 நபர்களுக்கும் அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா? இல்லை கண்டிப்பாக இருக்காது. இலங்கைப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் துன்பப்பட்டார்கள் மற்றும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் அகால மரணமடைய வேண்டும் என்று விதி இருந்திருக்குமா? இல்லை கண்டிப்பாக இருக்காது. ஆனால் மனிதர்களுக்கு இயற்கை முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாறுதல்களை உருவாக்குகிறார்கள்.
நல்லவர்கள் நல்ல விளைவுகளையும் தீயவர்கள் தீய விளைவுகளையும் மற்றவர்களின் வாழ்க்கையில் உருவாக்குகிறார்கள்.
Leave feedback about this