மிஞ்சியது ஏக்கமும்
ஏமாற்றமும் தான்
உன்னை நேசித்தற்கு
நீ தந்த பரிசு
உன் மீது பைத்தியமானேன்
நீயே உலகென வாழ்ந்தேன்
ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்டினேன்
அதிலும் அரைந்துவிட்டாய்
கன்னத்தில் வலியில்லை
நெஞ்சம் வலிக்கிறது
கண் கலங்குகிறது
உன்னையே தினம்
சுற்றிச் சுற்றி வந்த
மனதிற்குப் புரியவில்லை
உன் அன்பிற்குரியவன்
உன் பாசத்துக்குரியவன்
உன் காதலுக்குரியவன்
நானில்லை என்பது